இன்றைய ராசி பலன்: 16.ஜூன் .2024 - ஞாயிற்றுக் கிழமை

By 
father

           ஆனி - 2
        நல்ல நேரம் 

     காலை   : 7.30 - 8.30
    மாலை   : 3.30 - 4.30
  
   ராகு       : 4.30 -  6.00
   குளிகன் : 3.00  - 4.30 
   எமகண்   : 12.00 - 1.30
   சூலம்       : மேற்கு 

       சந்திராஷ்டமம் :
     அவிட்டம், சதயம் 

மேஷம் :
காரியத்தடை நிகழ நேரலாம். விழிப்புணர்வே எண்ணியது நிறைவேறும்.

ரிஷபம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

சிம்மம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கன்னி :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும். 

துலாம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும். 

தனுசு :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும். 

மகரம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

கும்பம் : 
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் நல்லது.

மீனம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.
 

Share this story