ஈகையே வாகை.!
Mar 30, 2021, 07:52 IST
By

ஆன்மீகத்தின் அஸ்திவாரமே அன்புதான். ஆம்..நெஞ்சில் ஈரம் மாறா ஈகைதான். அதுவே அறமும் தர்மும் தலைமையுமாம். இது குறித்து, ஒரு பாடல் காண்போம். வாங்க..
'அறநெற் முதற்றே யரசின் கொற்றம்
அதனால் நமகரனக் கோல் கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது
ஞாயிற் றன்ன இவந்திறலாண்மையும்
திங்களன்ன தன் பெருஞ் சாயலும்
வானத் தன்ன வன்மையுமூன்றும்
உடையை யாகி.
விளக்கம் : மன்னனுக்கு உரிய தகுதியில் முதன்மையானதும், மக்களால் வேண்டப்படுவதும் அவனது ஈகைக் குணம்தானே.
படை வலிமை மிகுந்ததாகவும் சிறப்புடையதாகவும் இருந்தாலும், அரசனுடைய வெற்றிக்கு அடிப்படைக் காரணம் அறநெறியே.!
- புறநானூறு ;
பாடல் : 55.
மன்னன் : பாண்டியன் இலந்திகை பள்ளித்துஞ்சிய நன்மாறன்
புலவர் : மதுரை மருதன் இளநாகனார்.