இருமனம் ஒருமனமாகும், பங்குனி உத்திரம்.!
 

By 
இருமனம் ஒருமனமாகும், பங்குனி உத்திரம்.!

பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில், பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

தெய்வீக திருமணம் :

இந்நாளிலே சிவன் – பார்வதி, முருகன் – தெய்வயானை, ராமர் – சீதை, ஆண்டாள் – ரங்கமன்னார் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.மேலும் சாஸ்தா, மகாலட்சுமி, அர்ஜூனன் போன்றோர்களின் அவதார தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது.பெரும்பாலானோர் தங்களின் குலதெய்வ வழிபாட்டினையும் இந்நாளில் மேற்கொள்கின்றனர்.

கல்யாண விரதம் :

தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாதலால், இந்நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் கல்யாண விரதம் என்று அழைக்கப்படுகிறது.

நல்ல திருமண வாழ்க்கை வேண்டி மணமாகாதோரும், திருமண வாழ்வானது வளமாகத் தொடர மணமானோரும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர்.முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தேர்திருவிழா பிரசித்தி பெற்றது.

Share this story