108 அடி உயர பெருமாள் சிலை.!
Mar 15, 2022, 04:49 IST
By

மொரீசியஸ் தீவில் உள்ள ‘ஹரஹர தேவஸ்தானம்’ என்ற ஆலயத்தின் முகப்பில், 108 அடி உயர வெங்கடேசப் பெருமாள் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மொரீசியஸ் தீவில் பாரஸ் சைட் என்ற இடத்தில் ‘ஹரஹர தேவஸ்தானம்’ என்ற பெயரில் இந்து ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. 2018-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் முகப்பில், 108 அடி உயர வெங்கடேசப் பெருமாள் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட சிலையின் அடியில் கோவில் இருப்பதுபோல் தோற்றம் அளிக்கிறது.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களை குறிப்பிடும் வகையில், இந்த சிலை 108 அடி உயரம் கொண்டதாக நிறுவப்பட்டதாக சொல்கிறார்கள்.
இந்த ஆலயத்திற்குள், 11 அடி உயர சிவலிங்கம், 22 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலைகள் போன்றவையும் பிரமாண்டத்தின் உச்சமாய் இருக்கின்றன.