ஏழு பிரகாரங்களை கொண்ட ஒரே கோவில்.. 

srirangam4

நாட்டிலேயே ஏழு பிரகாரங்களை கொண்ட கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மட்டுமே. இந்த பிரகாரங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக, முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கோவிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா உள்ளது போல, கோவிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். 

மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாக சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.

Share this story