ஆதிகேசவப் பெருமாள் கோவில் : சுத்தி கலச பூஜையை தொடர்ந்து கலாசாபிஷேகம்..

By 
ffff

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில், தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது கும்பாபிஷேகத்துக்கு முன்பு, பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. 

அதன்படி, கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை நடந்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாள கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமம், திரிகால பூஜைகள், கணபதி பகவதி சேவை, தேவி பூஜை ஆகியன நடைபெற்றது. 

கணபதி ஹோமத்தைத் தொடர்ந்து, சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் போன்றவை நடைபெற்றன.

ஆதிகேசவப்பெருமாளுக்கு 25 கலசங்களிலும், கிருஷ்ணசாமிக்கு 9 கலசங்களிலும், அய்யப்ப சாமிக்கு ஒரு கலசத்திலும் பூஜைக்குப் பின்னர் கலசாபிஷேகம் நடைபெற்றது. 

மேலும், வருகிற 25-ந் தேதி சர்ப்பபலி பூஜை நடைபெற உள்ளது.
*

Share this story