பெருமாள் கோவிலில், 13-ந்தேதி தேர்த்திருவிழா..
Fri, 8 Jul 2022

திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
இந்த கோவிலில் ஆனிப் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, சுவாமி தங்க தோளுக்கினியன் வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடை பெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வருகிற 9-ந்தேதி காலையிலும், 13-ந்தேதி தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது.
வருகிற 15-ந்தேதி மாலை கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறுகிறது.
*