மண்ணும் மனிதரும் நலம் வாழிய.! : சத்குருவின் பூமி தினச் செய்தி

By 
sadhguru

உலகம் மண்ணைப் பற்றிப் பேசுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், மண் தூய நீர் மற்றும் காற்றின் அடிப்படை.

மேலும், நாம் இருக்கும் வாழ்க்கையின் அடிப்படை'  என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு தனது பூமி தினச் செய்தியில் கூறியுள்ளார். 

மண்ணைக் காப்பாற்றும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, தனது 100 நாள், 30,000 கிமீ தனி மோட்டார் சைக்கிள் பயணத்தின் 33-வது நாளில், செர்பிய தலைநகர் பெல்கிரேடில் இருந்து, :அனைத்து உலக மக்களுக்கும் வாழ்த்துகள்' என்று சத்குரு தெரிவித்து உள்ளார். 

மேலும் 'அடுத்த 30-40 ஆண்டுகளில் மண்ணை அழிவிலிருந்து காப்பாற்ற, உலகளாவிய கொள்கை சீர்திருத்தங்களைத் தொடங்க, உலகம் உடனடியாகவும் உறுதியாகவும் செயல்படத் தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும்' என்றார். 

'ஒரு தலைமுறையாக, நாம் ஒருமனதாக தீர்மானித்தால், அடுத்த 8-12 அல்லது அதிகபட்சம் 15 ஆண்டுகளில் இதை மாற்றியமைக்க முடியும்' மேலும் 'விரைவான மண் சீரழிவு ஆண்டுதோறும் 27,000 நுண்ணுயிர் இனங்கள் அழிவு விகிதத்திற்கு வழிவகுக்கும்' என  கூறினார், 

வளமான பூமிக்கு மட்டுமல்ல, நீர் பாதுகாப்பு மற்றும் சுத்தமான காற்றுக்கும் காரணமான வளமான மண்ணின் ஆற்றல் வாய்ந்த சக்தியைப் பற்றிப் பேசிய சத்குரு, உலகெங்கிலும் உள்ள குடிமக்களை 'இந்த பூமி தினத்தன்று, இந்த இயக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு ஆதாரமாக, உத்வேகத்தின் ஆதாரமாக இருக்க உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள். 

மண்ணைப் பற்றி உலகம் பேசுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.' என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

மண்ணில் மனித கால்தடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி சத்குரு, 'கடந்த ஆயிரம் ஆண்டுகளில், உலகில் ஒளிச்சேர்க்கையின் பரப்பளவு 85% குறைந்துள்ளது' என்றார். 

ஒளிச்சேர்க்கை என்பது பூமியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் நிறைந்திருப்பதையும், மண்ணில் கார்பன் நிறைந்திருப்பதையும் உறுதிசெய்து, அதை உயிருடன் வைத்திருக்கவும், நுண்ணுயிர் செயல்பாடுகளுடன் செழித்து வளரவும் செய்கிறது. பசுமை போர்வை மட்டுமே இரண்டையும் சாத்தியமாக்குகிறது' என்றார்.

'ஒவ்வொரு நாட்டிலும் நிலத்தில் பயிர்கள், புதர்கள் அல்லது மரங்கள் என்று பசுமையான ஏதாவது இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த நாம் கொள்கைகளை உருவாக்க வேண்டும் - இது ஒளிச்சேர்க்கை எனப்படும் இந்த அதிசயத்தை செய்கிறது.

இது மண்ணையும் வளிமண்டலத்தையும் வளப்படுத்துகிறது: அதாவது கார்பன் சர்க்கரை கொண்ட மண், ஆக்சிஜென் கொண்ட வளிமண்டலம்.' என்று அவர் விளக்கினார்.

மண் அழிவு, உணவு மற்றும் நீர் பாதுகாப்பிற்கு உலகளாவிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது மற்றும் உலகம் முழுவதும் மோசமான உள்நாட்டு கலவரங்களை விளைவிக்கும் என்று ஐ நா வின் UNCCD மற்றும் FAO அமைப்புகள் எச்சரித்துள்ளது. இது முன் எப்போதும் இல்லாத வகையில் மிக பெரிய எண்ணிக்கையில் மக்கள் புலம் பெயர்தலை  ஏற்படுத்தக்கூடும், இது ஒவ்வொரு நாட்டின் தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தும்.

சத்குரு கடந்த மாதம் மண் காப்போம் என்ற உலகளாவிய இயக்கத்தைத் தொடங்கினார். 

அவசரக் கொள்கை சீர்திருத்தத்திற்கான உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்க ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வழியாக அவர் மேற்கொண்டுள்ள பயணம் ஜூன் மாதம் காவிரி நதிப் படுகையில் முடிவடையும். 

இந்த நதிப் படுகை ஈஷாவின் காவிரி கூக்குரல் இயக்கத்தின் தொடக்கப் புள்ளி, வெப்பமண்டலப் பகுதிகளில் மண் ஆரோக்கியம் மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு மாதிரியாக நதிப் படுகையை காட்சிப்படுத்த சத்குருவால் தொடங்கப்பட்ட லட்சிய சூழலியல் இயக்கமே காவிரி கூக்குரல்' என சத்குரு தெரிவித்தார்.
*

Share this story