அற்புத பலன் அருளும், மாசி மாத பிரதோஷம்.!

By 
lin

வழிபாடுகளில், சிவ வழிபாடு உள்ளும் புறமுமாக தெளிவையும் ஞானத்தையும் கொடுக்கக் கூடியது என்பார்கள். 

சிவ வழிபாடு செய்வதற்கு, மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திர நாள், ரொம்பவே விசேஷம். 

அதேபோல், மாதாமாதம் வருகிற சிவராத்திரி நன்னாள், சிவபெருமானை விரதம் இருந்து தரிசிப்பதும், பூஜிப்பதும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சுபிட்சம் :

அதேபோல், திரயோதசி திதி என்பது பிரதோஷ தினமாக, பிரதோஷ வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை என்று சொல்லப்படுகிற சோமவாரத்தில் வருகிற பிரதோஷம், சுபிட்சத்தையும் முக்தியையும் கொடுக்கும். 

பிரதோஷத்தன்று விரதம் இருந்து, சிவ பூஜை செய்தும் சிவனாரை தரிசித்தும் வேண்டிக்கொண்டால், வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் நடைபெறும்.

பிரதோஷத்தின்போது செய்யப்படுகிற தரிசனம், புத்தியைத் தெளிவாக்கும். ஞானத்தைக் கொடுக்கும். 

சோமவார பிரதோஷ நாள் மாலையில் சிவாலயம் சென்று தரிசனம் செய்வது, சிந்தையில் தெளிவையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் தந்தருளும்.

நிறைந்த பலன் :

கூடுதலாக, மாசி மாத பிரதோஷம் விசேஷம். மாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம்தான். 

அற்புதமான இந்த மாசி மாதத்தில் திங்கட்கிழமையில் வருகிற பிரதோஷத்தில் விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்வது நிறைந்த பலனாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி.!

Share this story