ஒவ்வொரு நிகழ்வும் சிற்பங்களாக காட்சி தரும் இராமாயணம்; எங்கே தெரியுமா?

இராமாயணம் பல்வேறு மொழிகளில் இயற்றப்பட்டு, இந்து மதத்தினரால் புனிதமாக வழிபாடு நடத்தப்படுகிறது.
முதன் முதலாக, சமஸ்கிருத மொழியில் வால்மீகி முனிவர் இராமாயணத்தை எழுதினார். பின்னர், தமிழ்ப்பண்பாட்டுக்கு ஏற்ப கம்பர் இயற்றினார்.
சிற்பக் காட்சிகள் :
இந்நிலையில், இந்தோனேசியாவில், உபுத்பாலி என்ற இடத்தில் பாறைகளில் இராமாயணக் கதை, சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உபுத்பாலி என்ற இடத்தில் பாயும் நதியில் ஒன்று, ‘ஆயுங் நதி.’ இது வடக்கு மலைத் தொடர்களில் இருந்து சுமார் 68 கிலோமீட்டர் தொலைவுக்கு பாய்கிறது.
பாங்கிலி, படுங், கியான்யார், டென்பசார் போன்ற நகரங்கள் வழியாக கடக்கும் இந்த நதி, சனூரில் உள்ள படுங் ஜலசந்தியில் இணைகிறது.
இந்த நதி பாயும் வழியில் உள்ள பாறைகளில் ராமாயணக் கதை, சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.
இதில், ராமரின் 14 ஆண்டுகால வன வாழ்க்கை, ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், சீதையை மீட்பதற்காக ராமர் படை திரட்டுதல், ராமருக்கும், ராவணனுக்குமான போர், சீதையின் அக்னிப் பரீட்சை போன்றவை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
நதிக்கரையில் ஆங்காங்கே மிக உயர்ந்த பிரமிக்க வைக்கும் சிற்பங்கள் தனித்தனியாகவும் செதுக்கப்பட்டுள்ளன.
வியப்பு :
ஆயுங் நதியின் கரையோரப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களையும், உள் படத்தில் கும்பகர்ணனோடு வானர வீரர்கள் மோதும் பிரமாண்ட சிலையையும் பக்தர்கள் கண்டு அதிசயிக்கின்றனர்.
மேலும், இராமாயண நிகழ்வுகளை சிறபங்களாக செதுக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் வரலாற்று ஆய்வாளர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது.