பக்தர்களுக்கு, திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்..

By 
tirupati4

;இன்று வியாழக்கிழமை முதல் 15-ந் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக, திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே, ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

வார இறுதி நாட்கள் கூட்டமும், திருவிழாவும் வருகிற 19-ந்தேதி வரை நீடிக்கும். 

மேலும், புனித மாதமான புரட்டாசி மாதம் செப்டம்பர் மாதம் 18-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 17-ந் தேதி முடிவடைகிறது. 

இந்த நேரத்தில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

எனவே முதியோர்கள், மாற்றுத்திறனா்ளிகள், சிறுகுழந்தைகளின் பெற்றோர் அக்டோபர் மாதம் வரை திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 

முக்கிய நாட்களில் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். 

எனவே, பக்தர்கள் தயாராக வந்து தரிசனத்திற்கான முறை வரும் வரை கம்பார்ட்மெண்ட்களிலும், வரிசைகளிலும் பொறுமையாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டும். 

இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story