இன்று ஸ்ரீராம நவமி : ராமபிரான், நவமி திதியில் ஏன் பிறந்தார் தெரியுமா?

By 
ramar

ஸ்ரீ ராமர் பூமியில் அவதரித்த நேரத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்ததால், ஸ்ரீ ராமரின் ஜாதகத்தை எழுதி, வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்துவந்தால் நன்மைகள் பெருகும்.

ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும். வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடையலாம்' என சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஸ்ரீ ராமர் அவதார நாள் :

ராமபிரான் எதற்காக நவமி திதியில் பிறந்தார் என்ற கதை தெரியுமா? 

பொதுவாக அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். 

இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் ஒருநாள் வருத்தப்பட்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள்.

‘நவமி திதி அன்றும், அஷ்டமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய முன்வர பயப்படுகிறார்கள். எங்கள் இருவரையும் ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதனால், எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது’ என முறையிட்டது.

(அஷ்டமி, நவமி திதியில் பொதுவாக எந்த ஒரு நல்ல காரியத்தையும் துவங்க மாட்டார்கள் அல்லவா?) 

எனவே, தங்களது கஷ்டத்தை விஷ்ணு பகவானிடம் 2 திதிகளும் முறையிட்டுள்ளது.’ 

போற்றும் நாள் வரும் :

கஷ்டத்தோடு வந்த அஷ்டமி, நவமிக்கும் விஷ்ணு பகவான் ஆறுதல் அளித்தார்.

‘உங்கள் இருவரையும் போற்றக்கூடிய நாள் வரும். அதுவரை நீங்கள் இருவரும் காத்திருக்க வேண்டும் என்றவாறு கூறினார்.’ 

இதன்படியே அஷ்டமி திதி அன்று எம்பெருமான், கிருஷ்ணர் அவதாரத்தையும், நவமி திதி அன்று ராமர் அவதாரத்தையும் எடுத்தார். 

இதன் அடிப்படையில் எல்லோரும் கோகுல அஷ்டமியும், ராம நவமியும், அஷ்டமி திதியில் நவமி திதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Share this story