வடபழனி முருகன் கோவில் : 12-ந்தேதி கலசாபிஷேகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்..

வடபழனியில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில், வைகாசி விசாக பெருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழச்சியான தேரோட்டம் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஒய்யாளி உற்சவம் :
கோவிலில் இருந்து புறப்பட்ட தேரோட்டம் மேற்கு மாட வீதி, வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு மாட வீதி, பழனி ஆண்டவர் கோவில் தெரு, தெற்கு பெருமாள் கோவில் தெரு, ஆற்காடு சாலை, நூறடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று, பின்னர் மீண்டும் வடபழனி கோவிலை வந்தடைந்தது.
தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.
செண்டை மேளம், சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு 7 மணிக்கு ஒய்யாளி உற்சவம் நடைபெற்றது.
நாளை 11-ந் தேதி இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது.
கலசாபிஷேகம் :
12-ந் தேதி காலை 9 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் வீதி உலாவும், 10 மணிக்கு தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது.
மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகன புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 13-ந் தேதி சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது.
14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு பரதநாட்டியம், இசைகச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
*