அறியாமல் செய்த பாவங்கள் நீங்க, ஓர் எளிய பரிகாரம்.!
 

By 
A simple atonement for sins committed unknowingly!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், ஏழு பிறவிகள் எடுப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. 

இந்த ஏழு பிறவியிலும் செய்த அத்தனை பாவங்களும் எளிதாக நீங்கச் செய்யக்கூடிய எளிய பரிகாரம் என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.

நாம் தெரிந்தோ, தெரியாமலோ பல பாவங்களை செய்திருந்தால், அதற்கான தண்டனைகளையும் அனுபவித்துக் கொண்டிருப்போம். சில நேரங்களில் என்ன பாவம் செய்தோமோ, ஏன் நம்மை இந்த விதி இப்படி ஆட்டிப் படைக்கிறது? என்று கவலை கொள்வோம். 

அந்த சமயத்தில், நாம் செய்யும் சிறு தானம் கூட, பல மடங்கு புண்ணிய பலனை கொடுக்குமாம். அந்த வகையில், தினமும் காலையில் எழுந்து கோலம் போடும் பொழுது, நாம் பச்சரிசி மாவில் கோலம் போட்டால் நம்முடைய பாவங்கள் நீங்குவதாக ஐதீகம்.

தெய்வீகத்தன்மை :

கோலமாவு கொண்டு கோலம் போடுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. பச்சரிசி மாவைக் கொண்டு கோலம் போடும் பொழுது, அது தெய்வீகத் தன்மையாக மாறுகிறது. 

கோலமும் பிரகாசமாக ஜொலிக்கும், அதை சாப்பிட வரும் எறும்புகள் மூலம் புண்ணியமும் பெருகும். இப்படி, எறும்புகளுக்கு உணவிடுவதன் மூலம் பாவங்கள் தீர்வதாக தீர்க்கமாக நம்பப்பட்டு வருகிறது.

சனிக்கிழமையில் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ளவேண்டும். சூரிய உதயத்தின் பொழுது, சூரியனை பார்த்து நமஸ்காரம் செய்து கொள்ளவேண்டும். 

விநாயகர் வழிபாடு :

பின்னர், அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்குச் செல்ல வேண்டும். விநாயகரை சுற்றி, கையில் வைத்திருக்கும் இந்த பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.

இதனை உண்ண வரும் எறும்புகள் மூலம், ஏழு ஏழு பிறவி பாவமும் நீங்குவதாக நம்பப்படுகிறது. 

இதையே, காஞ்சி பெரியவரும் பலமுறை அறிவுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சனி தோஷம் :

எறும்புகளின் எச்சில் பட்ட எந்த ஒரு உணவும் இரண்டே கால் வருடம் வரை கெட்டுப் போவது இல்லை. இந்த இரண்டேகால் வருடம் தானமாக கொடுத்த உணவானது, எறும்புக்கு பயன்படுகிறது என்பதை முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டே இருப்பார்களாம். 

இரண்டரை வருடத்திற்கு கிரக நிலைகள் மாற்றம் அடையும் பொழுது, எறும்புப் புற்றுக்குள் நாம் இட்ட பச்சரிசியின் தன்மையும் மாறும். இதனால், தான் எறும்புகளுக்கு உணவிடுவதன் மூலம் நம் பாவங்கள் நீங்குவதாக ஐதீகம் சொல்லப்பட்டுள்ளது. 

எனவே, அறியாமல் செய்த பாவங்களுக்கு அனுபவிக்கும் தண்டனையில் இருந்து விடுபட, இதைவிட சிறந்த எளிய பரிகாரம் இருக்க முடியாது. பாவங்கள் மட்டுமல்லாமல், சனி தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம் உண்டு. 

எனவே, சனி தோஷம் உள்ளவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பயன் அடையலாம்.
*

Share this story