ஆனி அமாவாசை; ராமேஸ்வரம் கடற்கரையில் திதி கொடுப்பதற்காக குவிந்த பொதுமக்கள்..

By 
aani3

ஒவ்வொரு ஆண்டும் நம் முன்னோர்களுக்கு அவர்கள் இறந்த தேதியில் திதி கொடுப்பது வழக்கம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் தை, ஆனி, ஆடி மாத அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு நீர் நிலைகளுக்கு சென்று திதி கொடுப்பது வழக்கம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் முன்னோர்கள் இதன் மூலம் நம்மை வழிநடத்தவார்கள் என்பது ஐதீகம்.

அந்த வகையில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் மாவட்டம் ராமநாதசுவாமி திருக்கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிந்தனர்.

அக்னி தீர்த்த கரையில் தீர்த்தமாடி மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்துவிட்டு பூஜைக்காக அழைத்து வந்த பசுவிற்கு பழங்கள், கீரை வகைகள் கொடுத்து வழிபட்டனர். 

கோவிலில் உள்ள மகாலட்சுமி, கங்கா, காவேரி, சேது மாத தீர்த்தம் உட்பட 22 புண்ணிய தீர்த்தமான தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு அதிக அளவில் வந்ததால் வாகன நெரசலை தடுக்க போக்குவரத்து காவல்துறை மாற்று பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this story