ஆலமகீ ஏகாதசியும், விஜயா ஏகாதசியும்.!

By 
ஆலமகீ ஏகாதசியும், விஜயா ஏகாதசியும்.!

பங்குனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, ஆலமகீ ஏகாதசி என்று பெயர். ஆலமகீ ஏகாதசி தினத்தில், விரதம் இருந்து திருமாலை வழிபட கோ (பசு) தானம் செய்த பலன் கிடைக்கும். இவ்விரதத்தை மேற்கொண்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.


விஜயா என்றால் வெற்றி : விஜயா ஏகாதசிநீலமேகப் பெருமாள், திருக்கண்ணபுரம் பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு, விஜயா ஏகாதசி என்று பெயர். விஜயா என்றால் வெற்றி என்பது பொருளாகும். தங்களுடைய முயற்சிகளில் வெற்றி பெற விரும்புவோர், இவ்விரதமுறையை பின்பற்ற நல்ல பலன் கிடைக்கும். ராமச்சந்திர மூர்த்தி இவ்விரத்தை மேற்கொண்டே இராவணனை வெற்றி கொண்டு, சீதா தேவியை மீட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

புனிதவதி குருபூஜை : சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையாரின் குருபூஜை, பங்குனி சுவாதியில் மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Share this story