நாகராஜா கோவிலில், தை திருவிழா இன்று தொடங்கியது

By 
At the Nagaraja Temple, the Thai festival started today

நாகர்கோவிலில் புகழ்பெற்ற நாகராஜா கோவில் உள்ளது. இங்கு தை திருவிழா இன்று திங்கட்கிழமை தொடங்கி, 19-ந் தேதி வரை நடக்கிறது. 

இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றம், 6.30 மணிக்கு கலையரங்கத்தில் திருவிளக்கு ஏற்றுதல், 6.45 மணிக்கு கடவுள் வாழ்த்து, இரவு 8 மணிக்கு பரத நாட்டியம், 8.30 மணிக்கு புஷ்ப விமானத்தில் சாமி எழுந்தருளல் போன்றவை நடைபெற்றன.

சிறப்பு அபிஷேகம் :

11-ந் தேதி காலை 7 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேக பூஜை, மாலை 5.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு மண்டகப்படி, 8 மணிக்கு சொல்லரங்கம், 

12-ந் தேதி காலை 7 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், மாலை 5.45 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 6 மணிக்கு கொம்மண்டை அம்மன் சாமி எழுந்தருளல், இரவு 7.50 மணிக்கு பரதநாட்டியம் ஆகியவை நடக்கிறது.

சிங்க வாகனத்தில் சாமி எழுந்தருளல் :

13-ந் தேதி காலை 7 மணிக்கு சிங்க வாகனத்தில் சாமி எழுந்தருளல், மாலை 6.30 மணிக்கு இன்னிசை கச்சேரி, இரவு 8.30 மணிக்கு இசை சொல்லரங்கம், 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 

14-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 5.30 மணிக்கு நாகராஜா சன்னதி சிறப்பு அபிஷேகம், மாலை 5.30 மணிக்கு சொற்பொழிவு, 6.20 மணிக்கு பக்தி இன்னிசை ஆகியவை நடைபெறும்.

பல்லக்கில் சாமி எழுந்தருளல் :

15-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சாமி எழுந்தருளல், மாலை 6.30 மணிக்கு பக்தி பஜனை, 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 8 மணிக்கு பரதநாட்டியம், 9 மணிக்கு யானை வாகனத்தில் சாமி எழுந்தருளல், 

16-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு பல்லக்கில் சாமி எழுந்தருளல், மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி எழுந்தருளல் போன்றவை நடக்கிறது.

17-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகராஜா சன்னதி சிறப்பு அபிஷேகம், மாலை 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9.30 மணிக்கு அன்ன வாகனத்தில் சாமி எழுந்தருளல் ஆகியவை நடைபெறும்.

தேரோட்டம் :

18-ந் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம், மாலை 5.30 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு மண்டகப்படி, 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடக்கிறது. 

விழாவின் இறுதி நாளான 19-ந் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஆராட்டு, ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்றவை நடைபெறும்.

Share this story