சிம்ம மாதம் என்ற ஆவணி மாத சிறப்புகள்.!
 

By 
Avani month specials of the month of Leo.!

ஆவணி மாதம் சிம்ம மாதம் என மலையாளத்தில் அழைக்கப்படுகிறது. 

தமிழகத்தில், சித்திரை மாதம் புத்தாண்டாக இருப்பதுபோல, கேரளத்தில் ஆவணி எனப்படும் சிம்ம மாதமே புத்தாண்டு துவக்க மாதமாக இருக்கிறது. 

நம்பிக்கை :

தமிழகத்தில், ஆவணி மாதம் விவசாயத்திற்கு முக்கியமான காலமாகும். ஆடியில் விதைத்து, ஆவணியில் கண்போல பயிரை பாதுகாத்து வளர்க்கின்றனர் விவசாயிகள். 

கிராமப்புறங்களில் உள்ள தங்களது காவல் தெய்வத்திற்கு ஆனி, ஆடி மாதங்களில் படையல் முடித்து, கொடைவிழா நடத்தும் மக்கள், இம்மாதத்தில் தாங்கள் செய்யும் தொழிலுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறார்கள்.

'மாதங்களுக்கு எல்லாம் அரசன்’ என்று இதற்குப் பொருள். சிங்க மாதம், வேங்கை மாதம் என்ற பெயர்களும் ஆவணிக்கு உண்டு. 

அகத்தியர் சொல் :

ஆவணி மாதத்தின் சிறப்பு பற்றி அகத்தியர் குறிப்பிடுகையில், ’சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை; சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை’ என்கிறார். 

ஆவணி மாதத்தில் தான், இளையான் குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. 

ஆவணி மூலம்:

ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தை, ’ஆனி மூலம் அரசாளும்’ என்று சிறப்பித்துச் சொல்வார்கள். அதுபோன்று, ஆவணி மாதம் வரும் மூலமும் சிறப்பு பெற்றதுதான். 

மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில், ஆவணி மூலத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, பிட்டுக்காக மண் சுமந்தது, நரிகளைப் பரிகளாக்கியது, வளையல் விற்ற லீலை என, மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்த விழாவில் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சொக்கநாதருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும்.

மேலும், கேரள மக்களால் கொண்டாடப்படும் உலகப் புகழ் திருவிழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம் தான் மலையாள மக்களால் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி :

தேடி வந்து வழிபட்டால், ஓடி வந்து வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமானின் திருஅவதாரம் நிகழ்ந்ததும், இதே ஆவணி மாதத்தில்தான்.

மாதந்தோறும், விநாயகருக்கு உகந்த சதுர்த்தி தினம் வந்தாலும், இந்த மாதத்தில் அவர் அவதாரம் செய்த சதுர்த்தி மட்டுமே ’விநாயகர் சதுர்த்தி’ என்று சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது.

Share this story