பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி : சார்தாம் யாத்திரை இன்று..
 

By 
 Badrinath, Kedarnath, Gangotri, Yamunotri Sardam pilgrimage today ..

இந்துக்களின் புகழ்பெற்ற புனித தலங்கள் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை ஆகும்.

இவை, இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. 

புனித யாத்திரை :

இந்த 4 தலங்களை உள்ளடக்கிய புனித யாத்திரை ‘சார்தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் இந்த சார்தாம் யாத்திரை காலங்களில் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த 4 புனித தலங்களுக்கும் வந்து வழிபடுகின்றனர். 

யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்திவிட்டு, அதன் பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு யாத்திரையை நிறைவு செய்வார்கள்.

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான யாத்திரை இன்று (18-ந்தேதி சனிக்கிழமை) தொடங்குகிறது.

இதற்கான ஏற்பாடுகளை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். 

சார்தாம் யாத்திரைக்கான தடையை, நைனிடால் உயர் நீதிமன்றம் நீக்கியதையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நெறிமுறைகள் :

யாத்திரையில் பங்கேற்போர், கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும், குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இதையடுத்து, 4 தலங்களை உள்ளடக்கிய சார்தாம் யாத்திரை இன்று தொடங்குகிறது.

Share this story