பிரம்மனும், பிரபஞ்சமும் : சில தகவல்கள்

By 
Brahman and the universe some information

இந்த பிரபஞ்சம், பரம்பொருள் எனப்படும் இறைவனால் உருவாக்கப்பட்டது. 

இதில், உள்ள அனைத்து உயிர்களையும், படைத்து, காத்து அருளும் பொறுப்பை மும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் செய்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனைப் பற்றி இங்கே பார்ப்போம்.

தொழில் :

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களில், படைப்புத் தொழிலை செய்து வருபவர், பிரம்மதேவன். உலக உயிர்களை சிருஷ்டிப்பவர் இவர்.

பிறப்பு :

ஒவ்வொரு பிரளய காலத்திலும், இந்த பிரபஞ்சம் அழிந்து, உலகம் புதியதாக உருவாகும். அப்போது, பிரம்மனும் புதியதாக பிறப்பதாக சொல்லப்படுகிறது. 

அவர், மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் (தொப்புள்) தோன்றியதாக புராணம் சொல்கிறது.

மனைவி :

பிரம்மன், வாக்குக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதியை மணம் செய்துள்ளார். 

விஷ்ணு, மகாலட்சுமியை தன்னுடைய மார்பில் வைத்திருப்பதுபோல, சரஸ்வதியை பிரம்மதேவன் தன்னுடைய நாக்கில் வைத்திருக்கிறார்.

பிள்ளைகள் :

படைப்புத் தொழிலில் தனக்கு உதவிகரமாக இருப்பதற்காக, சனகர், சனத்குமாரர், சனத்சுஜாதர், சனந்தர் ஆகியோரை படைத்தார். ஆனால், அவர்கள் தவம் இருப்பதையே மேன்மையாக கருதினர். 

இதனால் வசிஷ்டர், புலகர், புலஸ்தியர், பிருகு, தட்ச பிரஜாபதி, ஆங்கிரஸ், மரீசி, அத்ரி, நாரதர் ஆகியோரை தன்னுடைய பிள்ளைகளாக பிறக்கச் செய்தார்.

பிரம்மனுக்கு ‘நான்முகன், அயன், கஞ்சன், விரிஞ்சி’ எனப் பல பெயர்கள் உண்டு.

தனிச் சன்னிதி :

* ராஜஸ்தான் அஜ்மீர் பகுதியில் கோவில் உள்ளது.

* தமிழ்நாட்டில் திருகண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவிலில், மனைவியுடன் தனிச் சன்னிதியில் உள்ளார்.

* திருச்சி அடுத்த திக்கரம்பனூரில் உள்ள எத்தமர் கோவிலிலும் மனைவியுடன் காணப்படுகிறார்.

* ஈரோடு அருகே உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், வன்னி மரத்தடியில் பிரம்மன் அருள்கிறார்.

* திருநெல்வேலி மாவட்டம் பிரம்மதேசத்தில், கயிலாசநாதர் கோவிலிலும் பிரம்மனுக்கு சன்னிதி இருக்கிறது.

* திருச்சி அடுத்த திருப்பட்டூரில், தனிச் சன்னிதி உள்ளது. பிரம்மனுக்கான மிகப்பெரிய சிலை இங்கு உள்ளது.

Share this story