புத்தர் சிலையை வீட்டில் வைக்கலாமா? : முழு விபரம்..

By 
puddar

சமீபகாலமாகவே, நிறைய வீடுகளில் வாஸ்துவிற்காக புத்தர் சிலையை வைப்பது அதிகரித்து வருகிறது? இதற்கு என்ன காரணம்? புத்தர் சிலையை வீட்டில் வைக்கலாமா? எந்த திசையில் வைக்கலாம்?

நம்முடைய வீட்டிலுள்ள பொருட்களை வாஸ்துப்படி அமைப்பதன் மூலம், வீட்டிற்குள் எப்போதுமே நேர்மறை ஆற்றல் மேலோங்கும் என்றும், இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும் என்பதும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அந்தவகையில், அமைதி, கருணை, நல்லொழுக்கம், நல்லெண்ணத்தின் அடையாளமாக திகழும் புத்தர் சிலையை, பலர் தங்கள் வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.. இதில், தியான நிலையில் இருக்கும் புத்தர் சிலை அல்லது ஒருபுறம் நிற்கும் புத்தர் சிலை நல்லது.

புத்தரின் சிலையை வீட்டில் வைத்திருப்பதால், வீட்டில் அமைதி, செழிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது.. அத்துடன், நீங்கள் ஆன்மீக சக்தியையும் நேரடியாகவே அனுபவிக்க முடியும். புத்தர் சிலையை பார்க்கும்போது நம்முடைய மனதிலும் நல்லெண்ணமும் கருணையும் ஏற்படும். அமைதி முகம் கொண்ட புத்தரின் சிலை முன்பு தியானம் செய்தால், நம்முடைய மனமும் அமைதிப்பெறும்.

ஆனால், எந்தவொரு பொருளையுமே எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வாஸ்து படி புத்தர் சிலையை சரியான முறையில் வைப்பதால், நேர்மறை ஆற்றல் குடும்பத்தில் அதிகமாகவே கிடைக்கும்.

கிழக்கு திசை: அந்தவகையில், வீட்டில் புத்தரின் சிலையை வாஸ்து படி, கிழக்கில் வைக்க வேண்டும்.. இது சூரிய திசை எனப்படும்... புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் வாழ்வில் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது. சிலையை கிழக்கு நோக்கி வைக்க முடியாத பட்சத்தில் வடக்கு நோக்கி வைக்க வேண்டும்... இந்த திசை செழிப்பை பிரதிபலிக்கிறது.

குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைக்க வேண்டும். அதாவது, கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசை நோக்கி சிலையை வைத்தால் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

பிரார்த்தனையில் கைகளை மடக்கிய புத்தர் சிலைகள் பூஜை அறைக்கு ஏற்றது. சிரிக்கும் புத்தர் சிலையை ஹால், டைனிங் ஹால் போன்ற இடங்களில் தென் கிழக்கு திசையில் நீங்கள் வைத்தால், எதிர்பாராத அதிர்ஷ்டமும், வருமானமும் உயரும் என்பார்கள்.

நேர்மறை ஆற்றல்: தூங்கும் கோலத்தில் உள்ள புத்தர் சிலையை, மேற்கு திசையை நோக்கி வைக்கலாம்.. இதனால், வீட்டில் அமைதி நிலவும்.. மேற்கு நோக்கியும், வலது பக்கம் சாய்த்தும் வைக்க வேண்டும்.. இப்படி வைப்பதால், அமைதி, நேர்மறை ஆற்றல் கிடைக்கிறது.. அதேபோல, புத்தர் சிலையை வீட்டின் வாயிலில் வைத்தாலும், நன்மையே பிறக்கும்...

புத்தர் சிலையை ஜன்னல் அல்லது கதவுக்கு எதிரே வைக்கக்கூடாது. அதேபோல, படுக்கை அறையிலும் வைக்கக்கூடாது. அதேபோல, சிறிய மரச்சாமான்களிலும் வைக்கக்கூடாது... ஃபிரிட்ஜ் மீதோ அல்லது பெரிய சாதனங்களுக்கு பக்கத்திலோ வைக்கக்கூடாது... காரணம், பெரிய பொருள்கள் நேர்மறை அதிர்வுகளை தடுத்து விடுமாம்..

கிச்சன், பாத்ரூம்: அதேபோல புத்தர் சிலையை எப்போதுமே தரையில் வைக்கக்கூடாதாம்.. குறைந்தது தரையிலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் வைக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.. அதேபோல, சமையலறை மற்றும் குளியலறைக்கு அருகில் சிலையை வைக்கக்கூடாது. ஸ்டோர்ரூம், வாஷிங் ரூம்களில் வைக்கக்கூடாது.எப்போதுமே புத்தர் சிலை வைக்கும் இருப்பிடம், அதன் மதிப்பை அதிகரிக்க வேண்டும்.

புத்தர் சிலை உள்ள இடம் வெளிச்சமாக இருக்க வேண்டும். புத்தர் சிலை வைக்கும் இடம் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும்.. அந்தவகையில், புத்தர் சிலையை சுத்தமான மேஜை மீதோ அல்லது அலமாரியிலோ வைக்கலாம்.. குழந்தைகள் படிக்கும் அறையிலும் வைக்கலாம்..

வெள்ளை, மஞ்சள் அல்லது பழுப்பு நிறம் வாஸ்து சாஸ்திரத்தில் மங்களகரமானதாக கருதப்படுவதால், சிலையை இந்த வண்ணம் கொண்டே அழகுப்படுத்தலாம். அல்லது இந்த சிலைக்கு அருகில், ஏதாவதொரு பித்தளை, அல்லது பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில், சில பூக்களையும் போட்டு வைக்கலாம்
 

Share this story