முளைப்பாரி எடுப்பது ஏன் தெரியுமா?
Jun 27, 2023, 11:05 IST
By

அம்மன் கோவில்களில் முளைப்பாரிக்கு தனியிடம் உண்டு. இதனை முளைப்பாலிகை என்று சொல்வது தான் சரியாகும். பேச்சு வழக்கில் முளைப்பாரி என்றே கூறுகிறோம்.
நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக் கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு. பெண்கள் இதைச்சுமந்து செல்லும் போது அந்த அழகைக் காணலாம்.
அதே நேரம் வெறும் அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை. முளைப்பாரி எப்படி செழித்து உயரமாக வளர்கிறதோ, அதுபோல குடும்பம் தழைக்கும். பெண்ணுக்கு நல்ல கணவன் அமைவான் என்று சொல்வார்கள்.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நவதானியப் பாலிகை தெளித்து வளர்த்து, தம்பதிகள் அதை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் இதற்காகத் தான்.