கிருஷ்ணரின் எட்டு வடிவ கோலங்கள்..

By 
kj1

கிருஷ்ண பரமாத்மா மொத்தம் 8 வகையாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அவை குறித்து காண்போம். 

யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் சந்தான கோபால கிருஷ்ணர் கோலமாகும். 

தவழும் கோலத்தில் இருப்பவர் பாலகிருஷ்ணன். 

நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார். 

ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன். 

ருக்மணி, சத்யபாமாவுடன் இருப்பவர் முரளீதரன். 

அஷ்டபுஜங்களை உடையவர் மதனகோபால். 

கோவர்த்தனகிரியை தூக்கிப் பிடிக்கும் கோலத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவர்த்தனதாரி ஆவார். 

அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கும் கோலத்தில் இருப்பவர் பார்த்தசாரதி. 

கிருஷ்ணரை இப்படி எந்த கோலத்திலும் வழிபடலாம். ஆனால், கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரின் காலடி சுவட்டை கோலமாக வரைந்து வழிபட்டால், வீடே கோகுலமாக மாறிவிட்டது போன்ற பக்தி உணர்வு நம் மனதில் ஆழமாக பதிந்து விடும்.

Share this story