ஆற்றல் தரும் ஐந்து சிவ மந்திரங்கள்.!

By 
 Five Shiva Mantras that give energy!

சிவ மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால், வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். 

உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த மந்திரங்களுக்கு உண்டு.

பிறந்த ஜாதகத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்கும், சக்தி சிவ மந்திர ஜெபத்திற்கு உண்டு. 

சிவபெருமானுக்கு பல மந்திரங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து மந்திரங்கள் பார்ப்போம்.

பஞ்சாக்ஷர சிவ மந்திரம்:

'ஓம் நமசிவாய'

சிவபெருமானை போற்றுவதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப்பட்டது. 'நான் சிவபெருமை வழிபடுகிறேன்' என்பது இதன் பொருளாகும். 

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால், உடல் புனிதமடைகிறது. சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

ருத்ர மந்திரம் :

'ஓம் நமோ பகவதே ருத்ரே'

இது ருத்ர மந்திரமாகும். இறைவன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். 

இது ஒரு விருப்பத்தின் நிறைவேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

சிவ காயத்ரி மந்திரம் :

'ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்'

இந்து மதத்தில், காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்ரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

மன அமைதிக்காகவும், இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.

சிவா தியான மந்திரம்:

'கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் 

வா ஸ்ர்வமேதத்
க்ஷமஸ்வ ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ'

நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்கக்கோரி, இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.

மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:

'ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய'

அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால், மனிதனின் இறப்பு குறித்த பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே, மகா மிருத்யுஞ்சய் மந்திரம் இந்த பலனை நமக்கு அளிக்கும்.

Share this story