அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றம்; மற்றும் விழா நிகழ்ச்சிகள்..

By 
Flag hoisting at Arunachaleshwarar Temple today; And festival performances ..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவை முன்னிட்டு, கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் எல்லைக் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். 

அதன்படி, திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. 

தொடர்ந்து, கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று கொடியேற்றம் :

இதைத்தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 

அதிலிருந்து, 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெற உள்ளது.

கொரோனா தொற்று பரவலால் கொடியேற்ற விழாவில் பக்தர்கள் பங்கேற்கவும், மேலும் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை, தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

10 நாள் உற்சவம் :

கொடியேற்றத்தை அடுத்து, கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்ச மூர்த்திகளின் உற்சவம் 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு, கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

பின்னர், இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.
*

Share this story