திருமுறைகளில் விநாயகர்.!

By 
Ganesha in the showers.!

பக்தி இலக்கியங்களில் விநாயகர் போற்றி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அவை பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

*'காணாபத்யம்’ என்னும் கணபதி வழிபாடு அறுவகைச் சமயங்களில் முதலாவது ஆகும். இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் யாவரும் விநாயகரை வழிபடுகிறார்கள். 

* உலகெங்கும் விநாயகர் வழிபாடு உள்ளது. 'தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி’ என்று திருஞானசம்பந்தர், துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் பாடுகிறார். 

ஆம்! இன்றும் முழுமுதற் கடவுளாம் விநாயகரைச் சரணடைவதும் வழிபடுவதுமே சகல துன்பங்களுக்குமான பரிகாரமாக அமைந்து வருகிறது.

* அப்பரும் சுந்தரரும் விநாயகரைத் தேவாரத்தில் பாடியுள்ளனர். ரிக் வேதத்தில் கணபதி போற்றப்படுகிறார். 

* திருமந்திரத்திலும் மற்றும் பதினோராம் திருமுறையில் கபிலதேவர், பரணதேவர், அதிராவடிகள், நம்பியாண்டார் நம்பிகள் ஆகியோரின் பாடல்களிலும் விநாயகர் சிறப்பாகப் போற்றப்படுகிறார்.

* ஐந்து கரங்களும், யானை முகமும், சந்திரனைப் போன்ற தந்தங்களும் கொண்ட ஞானக் கொழுந்தான விநாயகரைப் போற்றினால் புத்தி வளரும், நலங்கள் பெருகும் என்று, 3000 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தனது திருமந்திரத்தில் பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share this story