அவன்தான் தலைவன்.!

நீ எவ்வழி வந்தாய்,நான் எவ்வழி வந்தேன்,.?சிந்தை விந்தையாய்விரியும்பொழுது,நிற்கும் வரலாறையும்
ஆத்மார்த்தமாய் பருகினால், நீயும் நானும் வேறல்ல என்பதே,எல்லா வேதங்களும் உணர்த்தும் கரு.! இதில்,
ஓர் பாட்டு பார்ப்போம். வாங்க..
'நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றேமன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்அதனால் யான்உயிர் என்பது அறிகைவேல்மிகு தானை வேந்தற்குக் கடனே
-- புறநானூறு -186.
விளக்கம் :
எந்த துறையை சார்ந்ததலைமைப் பொறுப்பில்இருப்பவர்க்கும், உயிர்தானே உடம்பை இயக்குகிறது? உயிர் நன்றாக இயங்கினால்தானே உடலும் நன்றாக இயங்கும்?
உடம்புக்கு வரும் நோயை உயிர் நுகர்ந்து கொண்டு, உடம்பைக் காக்கிறதே, அதுபோல தலைமைப் பொறுப்பில் இருக்கும் மன்னனுக்கு, அல்லது தலைவனுக்கு, மக்களை, காப்பதுதானே கடமை.!அதாவது,
மன்னன் செங்கோல் முறை தவறாமல் ஆட்சி செய்தால்தான், மழை தவறாமல் பெய்யும்.
நீரும் நெல்லும் மழை இல்லாமல் வருமா? எனவே, முறையோடு ஆளும் மன்னன்தான் இவற்றைத் தரும் உயிரின் உயிர் ஆவான்.
நெல்லும் நீருமா உயிர்?அகன்று விரிந்த நிலத்தில், பரவி வாழும் மக்களுக்கு உயிராக அமைவது எது? நெல் முதலிய உணவுப் பொருள்கள் அல்ல.
உயிரும், பயிரும் தோன்றுவதற்கும் அவை வளர்ந்து வாழ்வதற்கும் அடிப்படையாக அமையும் நீரும் அல்ல.மண்ணை ஆளும் மன்னன்தானே மக்களுக்கு உயிர்.இதை அறிவது, வேலால் வெல்லும் படையை உடைய வேந்தனின் கடமை அல்லவா.!
-- புறநானூறு ;
புலவர் : மோசிகீரனார்.
ஆம்.. ஒவ்வொரு உயிருக்கும்வாழ்க்கை இருக்கிறது;ஒவ்வொரு வாழ்வுக்குள்ளும்ஆத்மார்த்த வலிகள்
இருக்கிறது.தீயன கெடதீயிடுவதும், நல்லன வாழ போரிடுவதும் தூய ஆன்மீகமே.!