நலம், வளம் எல்லாமே துளசிதான்ங்க. எப்டின்னா.!

By 
 Health and prosperity are all Tulsitanga Eptinna.!

துளசிச் செடி ஒரு வாசனைமிக்க மருத்துவக் குணங்கள் நிறைந்த மூலிகைச் செடியாகும். 

இன்று உலகின் பல வெப்ப மண்டலப் பகுதிகளில் இச்செடி வளர்க்கப்பட்டாலும், இதன் பூர்வீகம் இந்தியா ஆகும். 

நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கான மருந்து கூட்டுப் பொருட்களில், இந்த துளசிச் செடியின் இலைகள் மற்றும் வேர்கள் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. துளசி, நமது மத சடங்குகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது.

இறையாற்றல் :

இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான இந்துக்களின் வீட்டில் இறைவனாகப் பாவித்து வணங்கப்படும் ஒரு துளசிச் செடி நிச்சயம் இருக்கும். 

இச்செடியை வீட்டில் வளர்ப்பதால், துஷ்ட சக்திகள் மற்றும் விஷ ஜந்துகள் அந்த வீட்டில் அநேகமாக நுழையாது. 

தினமும் அதிகாலையில் மற்றும் மாலை சந்தியா கால வேளைகளில், இந்த துளசிச் செடியை வணங்கி வந்தால், நம் உடலில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கி இரையாற்றலை நிரப்பும் ஆற்றல் கொண்ட இறைமூலிகையாகும்.

லட்சுமி வாசம் :

இந்து மதத்தில் மகாவிஷ்ணுவை முதன்மை கடவுளாக வழிபடும் ஸ்ரீ வைணவ சம்பிரதாயத்தில் துளசிச் செடி, அந்த விஷ்ணுவின் பத்தினியான ஸ்ரீ லட்சுமி தேவியின் அம்சமாகவே பாவிக்கப்பட்டு வணங்கப்படுகிறது. 

இந்த துளசிச் செடியை வீட்டில் மாடம் அமைத்து வழிபடப்படும்போது, எல்லா செல்வங்கள் மற்றும் சுகத்திற்கு காரணமாகும் லட்சுமி தேவி அந்த இல்லத்தில் தொடர்ந்து வாசம் செய்கிறாள். 

பல தெய்வீக ஆற்றல்களை கொண்ட துளசி செடியை முறையாகப் பராமரிக்கப்படும் வீட்டில், நடக்க இருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் தன்மை கொண்டது என கூறுகிறார்கள்.

நன்மை வந்து சேரும் :

ஒரு வீட்டில் மாடத்தில் வளர்க்கப்பட்டு வழிபடப்படும் துளசிச் செடி, அந்த வீட்டின் உயிராற்றலை தன்னுள் வைத்திருப்பதாக ஐதீகம். 

எப்படி முறையாக பராமரிக்கப்பட்டாலும், மாட துளசி வாடி வதங்கி போகிறதென்றால், அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்ய விருப்பமில்லாமல் வெளியேறிவிட்டாள் என்று அர்த்தம். 

களவுபோதல் அல்லது வேறு ஏதேனும் ஒரு கேடு, அவ்வீட்டில் ஏற்படுவதற்கான முன்னறிவிப்பாகவும் இதைக் கருதலாம். 

அதே நேரத்தில், துளசி செடிகள் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த செழிப்புடன் வளர்கிறதென்றால், அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருப்பதையும் மேலும் பல சுப நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களில் ஏற்படவிருப்பதை காட்டும் அறிகுறியாகும். 

எனவே, நமது வீட்டில் துளசிச் செடிகளை வளர்ப்பதோடு இல்லாமல், அதை முறையாக பராமரித்து வணங்கினால், பல நன்மைகள் நமக்கு ஏற்படும்.

Share this story