ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு : 24-ந்தேதிவரை வைபவம்..
 

By 
Heaven's Gate Opening in Srirangam Celebration till 24th ..

மணவாள மாமுனிகள் வகுத்துக் கொடுத்த பாதையில், இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே அத்யயன உற்சவம் வைகுண்ட ஏகாதசி வைபவம், கடந்த 3-ந் தேதி முதல் தொடங்கி, 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கத்தில், விஜயநகரப் பேரரசு காலத்தில் தை பிரம்மோற்சவம் ஏற்படுத்தப்பட்டபோது, மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதல் பகுதியில் தைத் திருநாளும் வந்ததால், எதைக் கொண்டாடுவது என்ற கேள்வி எழுந்தது.

அச்சமயம், மணவாள மாமுனிகள் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். அவர், வைகுண்ட ஏகாதசி (பகல்பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரியபெருமாளின் திருவுள்ளம் கேட்டு, அவர் நியமனத்தின்படி செயல்படுத்தினார்.

19 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இதைப் போல வரும் என அறிந்து, மாற்றியமைத்து நடைமுறைப்படுத்தினார். 

அவ்வகையில், இந்த ஆண்டு தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் தைத்தேர் உற்சவம் நடைபெற்றது.

எனவே, மணவாள மாமுனிகள் வகுத்துக் கொடுத்த பாதையில், இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே அத்யயன உற்சவம் வைகுண்ட ஏகாதசி வைபவம் கடந்த 3-ந் தேதி முதல் தொடங்கி, 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
*

Share this story