தமிழ்நாடு அரசு சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர வரலாறு

By 
History of the Government of Tamil Nadu Srivilliputhur Tower

தமிழ்நாடு அரசு சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், எப்படி தேர்வானது என்பது குறித்து சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

* ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரை ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டனர். பலரும் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். 

ரசிகமணி டி.கே.சி.யிடம் ஓமந்தூரார் யோசனை கேட்டார். 'இதற்கா இவ்வளவு யோசனை? தமிழ்நாடு முழுவதும் வானளாவிய கோபுரங்கள் எழுந்து நிற்கின்றனவே. அதைவிடவா தமிழ்க் கலையையும், தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்துக் காட்டும் சின்னம் வேறு இருக்கிறது? 

நம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் மிகவும் அழகான தோற்றத்துடன் இருக்கிறது. அதையே தமிழக அரசின் சின்னமாக வைத்துவிடலாமே' என்று உடனே பதில் சொல்லிவிட்டார். 

ரசிகமணி டி.கே.சி.யின் இந்த அரிய யோசனை ஏற்கப்பட்டு, தமிழ்நாட்டின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரம் இடம்பெற்றுவிட்டது. 

* தமிழக அரசின் முத்திரையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரத்தை முதன்முதலில் தமிழக அரசு சின்னமாக அறிவித்தவர் பி.எஸ்.குமாரசுவாமி ராஜா ஆவார். 

 * காமராஜரால் 1956-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது. பிறகு, 1968-ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டபோதும், இந்தச் சின்னமே நீடித்தது. 

* ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் தனித்தன்மை கொண்டது. அகலம் குறுகியிருப்பதால், பதினொரு நிலைகள் கொண்ட அதன் உயரம் ஒருவித பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கிறது. 

* உலக பன்னாட்டு நிறுவனம் புராதன சின்னமாக இக்கோபுரத்தை அறிவித்துள்ளது.

Share this story