கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று 'புனித வெள்ளி' ஆராதனை : சில நிகழ்வுகள்..

gf2

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முக்கிய நாட்களாக இந்த வாரத்தை கடைபிடிப்பார்கள். இயேசு கிறிஸ்து பாடு அனுபவிக்கிற இந்த நாட்களை புனித வாரம் என்று அழைப்பார்கள். 

வியாகுல வியாழன் இயேசுவின் கடைசி பஸ்கா ஆசரிப்பின் நாளில் பல சம்பவங்கள் நடந்தன. பஸ்கா ஆசிரிப்புக்கான ஆயத்தம், சாயங்காலத்தில் இயேசு 12 சீடர்களுடன் பந்தி அமர்ந்து, சீஷர்களின் கால்களை கழுவியது, யூதாஸ் காட்டி கொடுக்க ஆயத்தமானது. 'நான் உங்களின் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாய் இருங்கள் என்று சீடர்களுக்கு கட்டளையிட்டார்.

 'கெத்செமனே' தோட்டத்தில் இயேசு வியாகுலத்துடன் மும்முறை விழுந்து ஜெபித்தார். இந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபைகளில் பாதிரியார்கள் சபை மக்களின் கால்களை கழுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சி.எஸ்.ஐ. உள்ளிட்ட பிற திருச்சபைகளில் சிறப்பு வழிபாடு நேற்று மாலையில் நடைபெற்றது. 

இயேசுவை சிலுவையில் ஆணி அடித்து, கொலை செய்த நிகழ்வை நினைவு கூரும் வகையில் 'புனித வெள்ளி' நாள் கடைபிடிக்கப்படுகிறது. இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்களை உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருந்து சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். 

சி.எஸ்.ஐ. ஆலயங்களில் மும்மணி தியான ஆராதனை நடைபெறுகிறது. இயேசு சிலுவையில் அறைந்தபோது 7 வார்த்தைகளை சொல்வார். அந்த வார்த்தைகளை ஒவ்வொன்றாக தியானிக்கும் வகையில், இவ்வழிபாடு நடைபெறுகிறது. 

கத்தோலிக்க சி.எஸ்.ஐ. மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு திருச்சபை அமைப்புகளில் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.

Share this story