வெறுங்கையோடு வந்தேன், வெறுங்கையோடு செல்கிறேன் :மாமன்னர் அலெக்சாண்டர்.
 

By 
வெறுங்கையோடு வந்தேன், வெறுங்கையோடு செல்கிறேன் :மாமன்னர் அலெக்சாண்டர்.

20 வயதில் அரியணை ஏறி, 12 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக போர் புரிந்து, 33 ஆம் வயதிலேயே இறந்து போனார் மாமன்னர் அலெக்சாண்டர்.இறப்புக்கான காரணம் மர்மம், தெளிவாகச் சொல்லப்படவில்லை.

கி.மு.336 - 323 :

அலெக்சாண்டர் தான் ஈடுபட்ட எந்தப் போரிலும், தோற்றதில்லை.பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த, உலகின் பெரும் பகுதியை கைப்பற்றினார்.உலக வரலாற்றில், பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
இருப்பினும், அன்புதானேஉலகு.

வந்தது தாய்ப்பாசம் :

உலக நாடுகள் அனைத்தையும்,தன் காலடியில் கொண்டுவந்த மாபெரும் அரசர்.
தனது வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு, நாடு திரும்பினார். தன் தாயின் முகத்தை பார்க்கும் ஆவலுடன். பாசப் பறவையாய் பறந்து, விரைந்தார்.

ஞானம் தவிர வேறில்லை :

கிரீசுக்கு போகும் வழியிலேயே,(கடுங்காய்ச்சலால்) நடக்கவும் இயலாத அளவுக்கு , 
கொடும்நோய்க்கு ஆளானார் எனவும் சொல்லப்படுகிறது.

'தனது பணம், படைகள்,தான் கொள்ளையடித்த,பிரமாண்ட சொத்துகள் அனைத்தும் அர்த்தமற்றுப் போனதை..' அவர் உணர்ந்த அந்த நிமிடம்..ஆம்..'அலெக்சாண்டர் தி கிரேட்.!'ஞானம் பெற்ற அந்த நிமிடம்..! இதுவரை வாழ்ந்த அவரது வாழ்க்கையில் மிக அர்த்தமிக்கது.!
அவர் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும் மகத்தானது.!

மரணத்தை உணர்ந்த மாவீரர் :

ஞான நிலையில், மாவீரர் அலெக்சாண்டர்தன் உதவியாளர்களுக்கு தனது கடைசி ஆசைகளை, மூன்று கட்டளைகளாகப்பிறப்பித்தார்.

1. தான் இறந்த பின்,தனது சவப்பெட்டியை தனது உடற்பயிற்சியாளர்கள் மற்றும் போர்ப் பயிற்சியாளர்கள் சுமக்கவேண்டும்.

2. கல்லறைக்கு தனது சவப்பெட்டி செல்லும் வழியெங்கும்,பல நாடுகளை வென்றதன் மூலம் சம்பாதித்த தங்கம், வெள்ளி, வைரம் போன்ற கற்களை பரப்பி வைக்க வேண்டும்.

3. இதுதான் எனது கடைசி மூன்றாவது ஆசை, கட்டளை.'எனது இரண்டு கரங்களும் திறந்து இருக்கும்படி,
சவப்பெட்டிக்கு வெளியே தெரியுமாறு தொங்க விடப்பட வேண்டும்'.

இந்த விசித்திரமான மூன்று ஆசைகளுக்கும்,அவர் சொன்ன காரணங்கள்..இவைகள்தான் இதுவரை நான் கற்ற பாடங்கள். எனது வாழ்க்கையின் மூலம் உலகுக்கு கிடைக்கும் படிப்பினைகள்.

முதலாவதாக, 'இந்த உலகில் மனிதனை பிடித்த கடும்நோயை எந்த ஒரு மருத்துவனாலும் குணப்படுத்த இயலாது. குறிப்பாக, சாவில் இருந்து ஒருவனை யாராலும் தடுக்க இயலாது'.இரண்டாவதாக,
'எவ்வளவோ செல்வத்தைக் குவித்தும், நாடுகளை வென்றும் கடைசியில் எதுவும் கூட வராது'.

மூன்றாவதாக சொன்ன அவரது ஆசைக்கு காரணம்,'வெறுங்கையோடு வந்தேன். வெறுங்கையோடு செல்கிறேன்.எனது வாழ்வின் தத்துவத்தை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்.! என்றுணர்த்தி மறைந்தார் மாமன்னர் அலெக்சாண்டர்.

'வாழும்போதே வாழ வை,வாழ்ந்து கொண்டிருப்பாய்.!

Share this story