ஆத்மா, மறுபிறவி எடுத்திருந்தால் தர்ப்பணம் வீணாகுமா?
 

By 
If the soul has taken rebirth, will the prophecy be in vain


இந்து மதம் பற்றியும் வேத நெறி குறித்தும், சடங்குகள் குறித்தும் தயானந்த சுவாமிகள் ஏராளமான, அற்புதமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார். அவரது விளக்கங்கள் ஒவ்வொன்றும் உயர்வான சிந்தனைகளைக் கொண்டவை. ஆழமான கருத்துகள் கொண்டவை.

‘ஆத்மா எப்போது சாந்தி அடையும்? என்று கேட்ட கேள்விக்கு, தயானந்த சுவாமிகள் சிறப்பான பதிலை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :

இறப்பு என்பது, நமது தேகத்தில் இருக்கும் ஜீவன் தேகத்தை விட்டு வெளியே கிளம்புவது. 

ப்ரேத சரீரம் :

இந்த ஜீவன் சரீரத்திலிருந்து போகும் பொழுது, ஒரு சூட்சமமான தேகத்தோடுதான் பிரிய வேண்டும்.

எப்படி சொப்பனம் காணும் ஜீவன், சொப்பனத்தில் தனக்காக ஒரு சூட்சமமான தேகத்தை எடுத்துக் கொள்ளுகிறதோ, அதே போல் இறக்கும் போதும், அம்மாதிரியான ஒரு தேகத்தை எடுத்துக் கொள்கிறது. 

சொப்பனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய இந்த சூட்சம தேகமானது, சொப்பனம் காணும் மனிதனின் படுத்திருக்கும் தேகம் போலவே இருக்கும்.

அம்மாதிரியே இறக்கும்போதும், ஜீவன் இந்த சரீரம் போலவே ஏற்பட்ட ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு போகும். அதற்கு ப்ரேத சரீரம் என்று பெயர்.

இந்த ப்ரேத சரீரம் எவ்வளவு நாள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், நமக்கு நூறு வருசமாக இருந்தாலும், அந்த ஜீவனுக்கு ஒரு நாளாக இருக்கலாம். 

அதனால் தான், நாம் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி, அந்த ப்ரேத சரீரத்திலிருந்து ஜீவனானவன் விடுபட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால், பல ஈமச் சடங்குகளையும், தெய்வ கர்மாக்களையும் செய்கிறோம்.

தர்ப்பணம் வீணாகாது :

பிறகு கூட ஒவ்வொரு அமாவாசையன்றும், ஆண்டு தோறும், திதியன்றும் சில கர்மாக்களைச் செய்கிறோம். 

அந்த ஜீவன் மறுபிறவி எடுத்தால், செய்த சடங்குகள் வீணாகுமே என்று நாம் நினைக்கவேண்டாம். ஈஸ்வரனே ஜீவரூபமாக அதற்கான பலன்களைத் தருவான்.

ஜீவனுக்கு ‘தன்னுடைய ஆத்மாவும், ஈஸ்வரனுடைய ஆத்மாவும் ஒன்று’ என்று தெரிகிறவரை மறுபிறவி உண்டு' என்கிறார்.
*

Share this story