அசையா சொத்து பூதேவி-அசையும் சொத்து ஸ்ரீதேவி : செல்வம் நிலைக்க, இதோ ஸ்லோகம்..

மகாலட்சுமிக்கு இரண்டு வடிவங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி வடிவம். மற்றொன்று, பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.
அசலா-சஞ்சலா :
அசையாத சொத்துகள் எல்லாமே, பூமாதேவியின் வடிவம் ஆகும். அசையும் சொத்துகள் எல்லாமே, ஸ்ரீதேவியின் அம்சமாகும்.
அதனால்தான், பூதேவியை 'அசலா' என்றழைக்கிறார்கள். இதற்கு, அசையாதவள் என்று பொருள்.
அசைபவள் என்பதால் தான் ஸ்ரீதேவியை 'சஞ்சலா' என்றழைக்கிறார்கள்.
இதற்கு, ஓரிடத்தில் நில்லாமல் மாறிக் கொண்டேயிருப்பவள் என்று பொருள்.
செல்வம் நிலைத்திருக்க, ஸ்லோகம் :
கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில், 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லட்சுமி கடாட்ஷம் நிறைந்திருக்கும்.
'ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.'
- என்ற ஸ்லோகத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டு இருந்தாலே போதும்.
அதோடு, கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில், 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லட்சுமி கடாட்ஷம் நிறைந்திருக்கும்.
'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம:
வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ
ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ