ஆஞ்சநேயர் வழிபாட்டில், துளசியும் வெற்றிலையும்..

By 
anj1

துளசி இலை மருத்துவ சக்தி படைத்தது. நோய்களை விரட்டும் ஆற்றல் பெற்றது. ஆகவே துளசி இலைகளை மாலையாகத் தொடுத்து ஆஞ்சநேயருக்கு சாற்றி வணங்குகிறோம். நல்ல பலன்கள் கிடைக்கும்.

மேலும், பழ மாலை வழிபாடு பழங்களை மாலையாக தொடுத்து சாற்றி வணங்குவதும் சிறப்பான வழிபாடாகும். எலுமிச்சம்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம், அன்னாசிப்பழம் மற்றும் பழங்களின் மாலை சாற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஆஞ்சநேயர் உருவம் கொண்ட படத்தை வீட்டிலேயே வைத்துப் பூஜை செய்யலாம். வேண்டுதல்களைச் சமர்ப்பிக்கலாம். இது ஆத்ம திருப்தியுடன் கூடிய ஆற்றல்களைத் தரும். வெற்றிலை மாலை வழிபாடு சீதாவை அனுமார் அசோக வனத்தில் சந்தித்தபோது, வெற்றிலையை எடுத்து அவருடைய தலை உச்சியில் வைத்து "சிரஞ்சீவியாக வாழ்வாயாக" என்று சீதா பிராட்டியார் ஆசீர்வதித்தார்.

ஆகவே, வெற்றிலை ஆஞ்சநேயர் மிகவும் விரும்பும் பொருளாயிற்று ஆகவே, வெற்றிலை மாலையாகத் தொடுத்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம். ராமநாத உச்சரிப்பு வழிபாடு ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ஆஞ்சநேயருக்கு மிகுந்த விருப்பம். ஆகவே, ராமநாம பஜனை செய்து வழிபடுவது நல்ல பலன்களை தரும்.

 

Share this story