எட்டுத் திருக்கோலம் கொண்ட கண்ணனின் காட்சி பாரீர்.!
 

By 
 Kannan's scene with eight twists and turns.!

தீயவர்களையும் தீமைகளையும் அழித்து, நல்லோர்களையும் நன்மைகளையும் காப்பதற்காக, உருவானதே ஸ்ரீகிருஷ்ண அவதாரம். 

கிருஷ்ண லீலையை மனம் ஒன்றிக் கேட்டால் பசி, தாகம் ஏற்படாது. இங்கு, ஸ்ரீகிருஷ்ணரின் 8 வகை திருக்கோலம் பார்ப்போம்.

1. சந்தான கோபால கிருஷ்ணர் : யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

2. பால கிருஷ்ணன் : தவழும் கோலம், பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம்.

3. காளிய கிருஷ்ணன் : காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.

4. கோவர்த்தனதாரி : கிருஷ்ணன் தன் சுண்டு விரலால், கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்) : வலது காலை சிறிது மடித்து, இடதுகாலின் முன்பு வைத்து, பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

6. முரளீதரன் : இதில், கிருஷ்ணன் நான்கு கைகளுடன், ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம். இது, தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

7. மதன கோபால் : அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.

8. பார்த்தசாரதி :  அர்ஜூனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

Share this story