மதுரை மீனாட்சி கோவிலில், கார்த்திகை திருவிழா இன்று தொடக்கம்

Karthika Festival starts today at Meenakshi Temple, Madurai

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார்த்திகை மாத திருவிழா, இன்று 14-ந் தேதி தொடங்குகிறது. 

விழாவில், லட்ச தீபம் வருகிற 19-ந் தேதி ஏற்றப்படுகிறது.

23-ந்தேதி வரை :

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 12 மாதங்கள் திருவிழா நடைபெறும். 

அதில், கார்த்திகை மாதத்திற்கான திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை 14-ந் தேதி தொடங்கி, 23-ந் தேதி வரை நடக்கிறது. 

லட்ச தீபம் :

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி, ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

முக்கிய திருவிழாவான 19-ந் தேதி பெரிய கார்த்திகை அன்று, கோவிலில் மாலை 6 மணிக்கு லட்சதீபம் ஏற்றப்படுகிறது. 

அன்றைய தினம் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி, கிழக்கு சித்திரை வீதிகளில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளி, அங்கு சொக்கப்பானை ஏற்றப்படுகிறது.
 
திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் நடைபெறாது.

Share this story