சோமவார தினத்தில், சந்திரனுக்கு சிவன் தந்த அடைக்கலம்.!
 

By 
On Monday, Shiva gave refuge to the moon.!

சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரனுக்கு, சிவபெருமான் அடைக்கலம் கொடுத்தார். சிவபெருமான் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரனின் சாபம் நீங்கியது. இதுகுறித்த புராண நிகழ்வைக் காண்போம்.

தட்சனின் சாபம் :

தட்சனின் மகள்களான 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்தான். திருமணத்தின்போது, அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான். 

இதனால், மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். இதுபற்றி அறிந்த தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான்.

சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரன், சிவ பெருமானை தஞ்சம் அடைந்தான். 

சோமவார விரதம் :

இதையடுத்து சந்திரனுக்கு, தனது தலையில் அடைக்கலம் கொடுத்தார் சிவபெருமான். அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். இப்படி தான் தேய்பிறை- வளர்பிறை உருவானது.

சந்திரனை, சிவபெருமான் தனது திருமுடியில் அமர்த்தியது, ஒரு சோமவார தினத்தில் தான். 

'14 ஆண்டுகள் தொடர்ச்சியாக சோமவாரம் பூஜை செய்யும் கணவன்- மனைவிக்கு முக்தி கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என்று சந்திரன், ஈசனை வேண்டிக்கொண்டான். அவனது விருப்பத்தை சிவபெருமான் நிறைவேற்றினார். 

ஆம், தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்தால், இறைவனின் திருப்பாதத்தை அடையலாம்.

Share this story