பத்மாவதி தாயார் பவித்ரோற்சவ விழா : முக்தி பெற 3 நாள்..

By 
Padmavathi Mother Consecration Ceremony 3 days to get salvation ..

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், பவித்ரோற்சவ வி்ழா வருகிற 18-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 

முன்னதாக, 17-ந் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. 

* பவித்ரோற்சவத்தின் முதல்நாளான 18-ந் தேதி பவித்ரா பிரதிஷ்டை நடக்கிறது.

* 19-ந் தேதி பவித்ரா சமர்ப்பணமும், 20-ந் தேதி மகா பூர்ணாஹூதியும் நடைபெறுகிறது. 

* 20-ந் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை கோவில் வளாகத்தில், ஸ்நபன திருமஞ்சனம் மற்றும் சக்கரஸ்ஞானம் நடைபெறுகிறது.

* கடைசி நாளில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை, கோவில் வளாகத்தில் ஸ்நபநத் திருமஞ்சனம் மற்றும் சக்கரஸ்நானம் நடைபெறுகிறது.

* இதனை முன்னிட்டு, கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. கோவில் வளாகங்கள், சுவர், கூரை, பூஜை பொருட்கள் அனைத்தும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கோவில் முழுவதும் சூர்ணம், சுகந்த திரவிய பொருட்கள் கலந்த புனித நீர் தெளிக்கப்பட்டது. 

காலச் சூழ்நிலை கருதி, கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், அறம் நழுவாது விரதம் இருந்து தொடர்ந்து வழிபடுவோர் முக்தி பெறுவர். இறையடி சேர்வர்.
*

Share this story