சக்தி எனப்படுவது யாதெனின்..

By 
Power is what Yadenin is ..

சக்தி எனப்படுவது, தளர்வு மற்றும் விடுவிப்பதன் மூலமாக பதட்டத்தை வெளியே விடுவது..! ஆகவே, சக்தி பாயட்டும்.!!

சக்தி, எப்போதும் அன்பு என்கிற பொருளைத் தேடித்தான் ஓடுகிறது.

எப்போதெல்லாம் உங்கள் சக்தி எங்கோ தடைப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் அன்புதான் சக்தியை ஓடவைக்கிற ரகசியம்.

அன்பான ஒரு பொருளை தேர்ந்தெடுங்கள். எந்தப் பொருளாக வேண்டுமானாலும்
இருக்கட்டும். அது ஒரு காரணம் அவ்வளவுதான். நீங்கள் ஒரு மரத்தை அன்போடு தொட்டால்கூட அந்த சக்தி பாயத்துவங்கும்.

காரணம் எங்கெல்லாம் அன்பு இருக்கிறதோ, சக்தி அதை நோக்கிப் பாயும். தண்ணீர் கீழ்நோக்கி பாய்வதைப்போல, நீர் கடல் இருக்கிற பக்கத்தை தெரிந்துகொண்டு, கடலின் எல்லையை நோக்கி நகரத்துவங்கும்.

எங்கெல்லாம் அன்பு இருக்கிறதோ, சக்தி அந்த `அன்பின் எல்லை’ யை அறிந்துகொண்டு அதை நோக்கி நகரும்.

மஸாஜ் உங்களுக்கு உதவும், அதை அன்போடு செய்தால் அது உதவும். 
அல்லது எதுவுமே உதவும்.

ஒரு கல்லை அன்போடு உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஆழ்ந்த ஈடுபாடு இருக்கவேண்டும். அதன்மீது ஆழ்ந்த அன்பை செலுத்துங்கள். 

அந்த கல் இருப்பதற்காக விசுவாசத்தோடு, உங்கள் அன்பை அது ஏற்றுக் கொண்டதற்காக நன்றியோடு கண்களை மூடுங்கள்.

திடீரென்று உங்கள் நாடித் துடிப்பை உணர்வீர்கள். சக்தி நகரத் துவங்கும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உணர்வலைகள் பாயும்.

உங்களுக்கு எந்த பொருளும் தேவையில்லை. உண்மையில், இங்கே நீங்கள் யாரையோ விரும்புவதாக நினைத்தாலே,
ஒரு சக்தி உங்களுக்கு வரும்.

பிறகு, அந்த யோசனையைக் கூட தூக்கிப் போட்டுவிடலாம்.,
அன்பு கனிந்து இருங்கள், சக்தி உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.

அன்பு என்பது ஓட்டம், நாம் உறைந்து போகிறோம். காரணம் நாம் அன்பு செலுத்துவதில்லை.

அன்பு என்பது கனிவானது, அந்த கனிவிருக்கும்போது உறைந்துபோவது என்பது நடக்காது. 

அன்பு இல்லாதபோது, எல்லாமே உறைந்துபோகும். உங்கள் சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும்' என மொழிகிறார் ஓஷோ.

ஆம்.. புன்னகைத்து மலரும் பூக்கள்தான், பூமியில் நறுமணம் கொள்கிறது.

ஆதலால், புன்னகைப்போம், மனிதம் மாண்புறும் நறுமனத்துடன்.!
*

Share this story