பிரதோஷம், அமாவாசை சிறப்பு வழிபாடுகள் : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

By 
sathuragiri5

* மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாத அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அதேபோல தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

*  திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடக்கிறது. அதையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை அங்குரார்ப்பணம், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை யாக சாலை பூஜை, பவித்ர பிரதிஷ்டை, சயனாதிவாசம் நடக்கிறது.

14-ந்தேதி யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள், பவித்ர மாலைகள் சமர்ப்பணம், 15-ந்தேதி யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள் மற்றும் பவித்ர பூர்ணாஹுதி நடக்கிறது. இதோடு பவித்ரோற்சவம் நிறைவடைகிறது. மேற்கண்ட 3 நாட்கள் காலை நேரத்தில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை நேரத்தில் திருவீதி உற்சவமும் நடக்கிறது.

 

Share this story