வளம் அருளும், வசந்த நவராத்திரி.!
 

By 
வளம் அருளும், வசந்த நவராத்திரி.!

அன்னை பராசக்தியை விரதமுறைகளை மேற்கொண்டு வழிபாடு செய்யக்கூடிய நாட்களே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. சாரதா நவராத்திரி, ஆசாட நவராத்திரி, சியமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி என ஆண்டில் நான்கு நவராத்திரி விழாக்கள் அன்னை வழிபட மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நவராத்திரிகளில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் முக்கியமானவை.

வசந்த நவராத்திரி பங்குனி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை பிரதமை முதல், வளர்பிறை நவமி வரை ஒன்பது நாட்களாகவும், பங்குனி வளர்பிறை பிரதமை முதல் அடுத்த பௌர்ணமிவரை பதினைந்து நாட்களாகவும், பங்குனி வளர்பிறை பிரதமை முதல், சித்ரா பௌர்ணமி வரை நாற்பத்தைந்து நாட்களாவும் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவில் சில கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. இவ்வழிபாட்டினை மேற்கொள்ள, வளமான யோகத்தை அன்னை அருளுவாள்.

Share this story