இன்று ஆவணி மாத சர்வ அமாவாசை : வழிபாட்டு முறைகள்..

By 
sar2

ஆவணி அமாவாசை தினத்தில் பெற்றோர்கள் இல்லாத ஆண் எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது அவசியம். இந்த அற்புத மாதத்தில் ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, ஆவணி அவிட்டம், ஆவணி அமாவாசை, பௌர்ணமி போன்ற தெய்வீக சிறப்புகள் பொருந்திய பல விசேஷங்கள் அடங்கியது. 

இந்த அற்புத நாளில் உங்கள் முன்னோர்களை நினைத்து பித்ருக்கள் வழிபாடு தர்ப்பணம் கொடுப்பதோடு, காக்கைக்கு உணவளித்து அவர்களின் ஆசி பெற உகந்த தினம். பித்ருக்களுக்கு தர்ப்பணம், கொடுப்பதன் மூலம் பித்ரு சாபம் நீங்கி, உங்கள் வாழ்வில் பெருமகிழ்ச்சியுடன் வாழலாம்.

ஆவணி அமாவாசை தினத்தில் என்ன செய்யலாம்?

ஒவ்வொரு அமாவாசை தினமும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள். இந்த நாளில் முன்னோர்களுக்கு கருப்பு எள், தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுப்பதோடு, கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு வைப்பதன் மூலம், முன்னோர்களின் ஆசி பெற்றிடலாம்.

இந்த தினத்தில் பெற்றோர்கள் இல்லாத ஆண் எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது அவசியம். இந்த நாளில் காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்யலாம் ஆனால் கோலம் போடக்கூடாது. வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு பூக்கள் வைத்து, சந்தனம், குங்கும திலகமிடுங்கள். தீப, தூப ஆராதனை செய்யுங்கள். விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து, அன்று வீட்டில் நீங்கள் சமைத்த உணவை முன்னோர்களுக்கு படைப்பதோடு, அந்த உணவை காகத்திற்கு வைத்து அதன் பின்னர் உணவருந்தவும்.

முன்னோர்களின் ஆசி பெறுவது, குலதெய்வத்தை வணங்குதல், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். திருமண தாமதம், ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும். 

Share this story