நல்லதே நடக்கும் : சித்தர் ஜீவசமாதி வழிபாடு..விவரம்..

By 
Good things will happen: Siddhar Jivasamadhi worship. Details ..

பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும், தெய்வ அருளைப் பெறமுடியாமல் இருப்பார்கள். 

அவர்கள், எந்த நாளில் சித்தரை வழிபாடு செய்தால், பிரச்சினைகள் தீரும் என அறிந்து கொள்ளலாம்.

மாறுதலான வாழ்வு :

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். 

பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும், தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் தங்களது திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும். 

ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு, பின்பு வீட்டிலேயே மறுமுறையில், அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால், பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

நல்லதே நடக்கும் :

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால், அங்கு சென்றுவர இயலாதவர்கள், வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து, முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும், உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால், அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம்.

Share this story