ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் : பக்தர்களுக்கு அரசு அனுமதி..

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பக்தா்கள் வழக்கம்போல் பங்கேற்கலாம். ஆனால், மற்ற ஆர்ஜித சேவைகளில் பங்கேற்று வழிபட பக்தர்களுக்கு அனுமதியில்லை என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர மாநில அரசு கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், 21-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் ஒருசில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தினமும் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
மேலும், கோயிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பக்தா்கள் வழக்கம்போல் பங்கேற்கலாம்.
ஆனால், மற்ற ஆர்ஜித சேவைகள் அனைத்தும் கோவில் சார்பில் நடத்தப்படும். அதில் பங்கேற்று வழிபட பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.