சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் : நாளை புஷ்பாபிஷேக விழா

By 
suchindram temple festival on tomorrow

தமிழகத்தில், வழிபாட்டுத்தலங்களுக்கான, தரிசன அனுமதி வழங்கிப்பட்டதற்கு பின்னர், நெறிமுறைகளுடன், பக்தர்கள் வழிபாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தாணுமாலய சாமி :

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமையன்று, கோவிலில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் புஷ்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

அதுபோல், இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா 16-ந்தேதி நாளை நடைபெறுகிறது. 

அதன்படி, அன்று மாலை 6.30 மணிக்கு கோவில் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பின் தட்சணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலய சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள், நவக்கிரக மண்டபம், கைலாசநாதர், சாஸ்தா, ராமர் சன்னதி, 

மற்றும், 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் உட்பட அனைத்து சாமிகளுக்கும் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

புஷ்பாபிஷேகம் :

கிரேந்தி, வாடா மல்லி பூக்களை தவிர்த்து, மீதமுள்ள பூக்களால் புஷ்பாபிஷேகம் விழா நடைபெறும். 

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

Share this story