கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்று சுருக்கம்..

By 
kri2

திரேதாயுகத்தில் விஷ்ணு பகவான் ராமாவதாரத்தை முடித்து வைகுண்டம் சென்ற பிறகு, பூலோகத்தில் தன்னைத்தானே அரசன் என்று பிரகடனம் செய்துகொண்ட பெரும் அரக்கர்களின் பெருஞ்சுமையை தாங்கிக்கொள்ள முடியாத பூமாதேவி விஷ்ணு பகவானிடம் முறையிட்டபோது..

அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த நானே யது வம்சத்தில் வாசுதேவரின் மகனாய் பிறந்து பல லீலைகள் புரிந்து வாசுதேவ கிருஷ்ணராய் பூமியில் அவதரிப்பேன் என்று பூமாதேவிக்கு வாக்களிக்கிறார். 

அதன்படி, போஜவம்சத்தை சேர்ந்த உக்கிரசேனனின் மகனான கம்சனின் சகோதரி தேவகிக்கும், யது வம்ச மன்னரான வாசுதேவருக்கும் திருமணம் நடக்கிறது. கம்சனின் சகோதரி தேவகியை சந்தோசப்படுத்த 400 யானைகள், 15 ஆயிரம் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், 18 ஆயிரம் ரதங்கள் என்று தேவகிக்கு சேசகம் செய்ய 200 பணிப்பெண்கள் என்று பிரம்மாண்டமாக திருமணம் முடிந்து ஊர்வலமாக அழைத்துக்கொண்டு வரும்போது கம்சனுக்கு ஒரு அசரிரீ ஒலிக்கிறது. 

அதில், கம்சா நீ உன் சகோதரிக்கு தேரோட்டி செல்கிறாய். ஆனால், இவளுடைய 8-வது ஆண் குழந்தைதான் உனக்கு காலனாக வரப்போகிறான் என்ற சத்தத்தை கேட்ட கம்சன் தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்ல முயற்சி செய்கிறான். 

உடனே, தேவகியின் கணவரான வாசுதேவர் தன் மனைவியை காக்கும் பொருட்டு கம்சனே உனக்கு கேட்ட அந்த அசரிரீ உண்மை என்றால் எங்களுக்கு பிறக்கும் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும் என்றால் எங்களுக்கு பிறக்கும் குழந்தையை உன்னிடமே ஒப்படைத்துவிடுகிறோம். நீ என்னவேண்டுமோ செய்துகொள் என்று சொல்லி கம்சனிடம் இருந்து தேவகியின் உயிரை காப்பாற்றினார். 

அதன்பிறகு, தேவகிக்கு முதல் குழந்தை பிறந்தது. வாக்கு தவறாத வாசுதேவர் சொன்ன சொல்லை தவறாமல் குழந்தையை கம்சனிடம் கொடுத்தார். அதற்கு கம்சன் உன்னுடைய 8-வது குழந்தையால் தான் எனக்கு மரணம். இந்த குழந்தை தேவை இல்லை என்று கூறி அனுப்பிவிட்டார். கிருஷ்ணரின் வருகைக்காக காத்திருக்க முடியாத நாரதர் வசுதேவர் உன்னை ஏமாற்றலாம் 7 வது குழந்தையை காட்டி இதுதான் 8-வது குழந்தை என்று கூறலாம். 

எனவே இருவரையும் சிறையில் அடைத்து அவர்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளையும் கொன்றுவிடு. எந்த குழந்தையால் கூட உனக்கு ஆபத்து வரலாம் என்று கூறினார் நாரதர். நாரதர் பேச்சை கேட்டு பயந்த நாரதர் எந்த குழந்தையையும் நம்ப முடியாது வரிசையாய் எல்லா குழந்தையையும் கொன்றுவிட எண்ணினார். அதற்கு முதலில் தன்னுடைய தந்தையான உக்கிரசேனனை சிறையில் அடைத்து அரசனாக முடிசூடிக்கொண்டார். 

அதன்பிறகு வசுதேவரையும், தேவகியையும் சிறையில் அடைத்து அவர்களுக்கு பிறந்த 6 ஆண்குழந்தைகளையும் வரிசையாக வதம் செய்தார். தேவகி 7-வது முறையாக கர்பம் அடைந்தார். கிருஷ்ணருக்கு உதவியாக அனந்தனாகிய ஆதிசேஷன் தோன்றினார். இந்த குழந்தையையும் கம்சன் கொன்றுவிடுவான் என்று எண்ணிய விஷ்ணுபகவான் தன்னுடைய யோக சக்தியால் தேவகியோட 7-வது கர்ப்பம் கோகுலத்தில் வாழும் வாசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகினியின் வயிற்றுக்கு மாற்றப்படுகிறது.

 8-வது முறையாக ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திர வம்சத்தில் விஷ்ணு பகவானே பூமாதேவிக்கு வாக்களித்தபடி பூலோகத்தில் பிறக்கிறார். அவர் பிறந்ததும் நான்கு கைகளிலும் சங்கு சக்கரத்துடன் வசுதேவருக்கும், தேவகிக்கும் காட்சி கொடுத்தார். 

வசுதேவரும், தேவகியும், கம்சனை பற்றிய பயம் துளியுமின்றி முழுமுதற்கடவுளான விஷ்ணுவை வணங்கினர். விஷ்ணு பகவான் கோகுலத்தில் உன் நண்பனான நந்தனுக்கும், அவனது மனைவி யசோதைக்கும் பிறந்த பெண்குழந்தையை எடுத்துவா நான் யசோதையின் மகனாய் கோகுலத்தில் வளர்கிறேன். உரிய காலம் வரும்போது கம்சனை வதம் செய்து உங்களையும் மீட்கிறேன் என்று கூறினார் 

விஷ்ணு. விஷ்ணுவும் சிறைகாவலர்களை மயக்கமடைய செய்து வசுதேவரின் மூலம் கோகுலத்தில் யசோதையின் மகனாக கிருஷ்ணர் வளர்கிறார். வசுதேவர் நந்தனின் மகளை மதுராவிற்கும் எடுத்து வந்துவிடுகிறார். சிறையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்து கம்சன் பெண் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்து போகிறார். 

என்ன குழந்தையாக இருந்தால் என்ன என்று அந்த பெண்குழந்தையை எடுத்து சுவற்றில் அடிக்கும் போது விஷ்ணுவின் இளைய சகோதரி துர்க்கையின் வடிவத்தில் காட்சி தந்து உன்னை கொல்லப்போகும் குழந்தை கோகுலத்தில் வளர்கிறது என்று கூறிவிட்டு அந்த பெண்குழந்தை மாயமாக மறைந்தது. கிருஷ்ணர் கோகுலத்தில் மாயோண் கண்ணனாய் கோபியர்களின் உள்ளத்தை கொள்ளையடித்த வெண்ணெய் திருடனாய், கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கர்களை அழித்து, ஆடிப்பாடி குழலூதி, நண்பர்களுடன் விளையாடி 

குறும்புத்தனம் செய்து காலத்தை கழித்து கோகுலத்திலேயே செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்தார். ராதையுடன் காதல்கொண்டு சிறுவயதிலேயே பிரம்மதேவர் முன்னிலையில் இரண்டுபேருக்கும் திருமணம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. 13 வயதில் தன்னுடைய தாய்மாமனான கம்சனை கிருஷ்ணர் வதம் செய்தார். ராதைக்கும் அயன்கூட திருமணம் நடக்கிறது. 

கிருஷ்ணர் மதுராவிற்கு சென்றபின்னர் கோகுலத்திற்கு திரும்பிவரவில்லை, ராதையையும் சந்திக்கவில்லை. கம்சனை வதம் செய்தபிறகு மதுராவில் அரசனாக முடிசூடிக்கொண்டு ஆட்சி செய்து வந்தார் கிருஷ்ணர். மாபெரும் பலசாலியான கம்சன் தன்னோட மருமகனால் கொல்லப்பட்டான் என்ற செய்து அறிந்த கம்சனின் மாமன் ஜராசந்தன் தன்னுடைய இரண்டு பெண்களும் விதவையானதற்கு காரணம் கிருஷ்ணர் தான் காரணம் அவரை கொன்றே ஆகவேண்டும் என்று முடிவு செய்தார். குதிரைப்படை, யானைப்படை என்று பல படைகளை உடைய மாவீரன் ஜராசந்தன். 17 முறை மதுரா மீது போர்தொடுத்து வருகிறார். 

ஆனால் கிருஷ்ணர் பிறந்ததற்கான காரணமே பூமாதேவியின் பாரத்தை குறைப்பது. ஒவ்வொரு முறையும் ஜராசந்தரின் படைகளை கிருஷ்ணரும், பலராமரும் சேர்ந்து தோற்கடித்தனர். அப்படியும் ஜராசந்தன் மற்ற நாட்டு படைகளை கூட்டிக்கொண்டு மதுரா மீது தொடர்ந்து போர்தொடுத்து சென்றார். ஜராசந்தனின் வெறி அடங்கவில்லை. கிருஷ்ணரின் வம்சத்தையே அழிக்க வேண்டும் என்று முடிசெய்கிறார். 

ஆனால் கிருஷ்ணர் நினைத்திருந்தால் ஜராசந்தனின் வம்சத்தையே அழித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நாட்டை பாதுகாக்க மனிதர்களும், அரக்கர்களும் போக முடியாதபடி. ஒரு கோட்டையை உருவாக்க முடிவு செய்கிறார். 

பாகவத நூலில் கிருஷ்ணர் கடலுக்கு மத்தியில் எவ்வாறு கம்பீரமான துவாரகையை உருவாக்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகமே வியந்துபோகிற அளவுக்கு யாருமே படை எடுத்து கிட்ட கூட நெருங்காதபடி ஒரு நகரத்தை உருவாக்க முடிவெடுக்கிறார். சாதாரன கட்டிடக்கலை நிபுணர்கள் வேண்டாம் என்று தேவசிற்பியான விஷ்வகர்மாவை அழைத்து ஆலோசனை கேட்டார். அதற்கு விஷ்வகர்மா நிலத்தில் வேண்டாம். கடலுக்கு நடுவில் அப்படி ஒரு நகரத்தை உருக்கலாம் என்று கிருஷ்ணரிம் சொல்கிறார்.

அதற்கு கிருஷ்ணர் கடல் அரசனிடம் கேட்டு குஜராத் கடலுக்கு நடுவில் ஒரு தீவை ஆக்கிரமித்து மிகப்பெரிய மாளிகையை விஷ்வகர்மாவால் கட்ட வைக்கிறார். நாம் பாகுபலி படத்தில் எவ்வாறு மிகப்பிரமாண்ட மாளிகைகளை பார்த்திருக்கிறோமே, அதேபோல் பிரமாண்டமான மாளிகையை கட்டினார்கள். கிட்டத்தட்ட 9 லட்சம் மாளிகைகள் கொண்ட அப்படி ஒரு கோட்டையை விஷவகர்மா இதுவரை கட்டியதில்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த மாளிகை மிகப்பிரமாண்டமாக காட்சி அளித்தது. 

எலாமே தங்கத்தாலும், வைரத்தாலும் செதுக்கி அரண்மணைகளை உருவாகினார்கள். எல்லா வகை வசதிகளுடனும் துவாரகை நகரம் உருவாக்கப்படுகிறது. அங்கு வாழும் மக்கள் எந்த தேவைக்காகவும் வெளியே செல்லாத அளவுக்கு அங்கு விவசாயம்,, வணிகம் ஆகிய துறைகள் சிறந்து விளங்கியது.

ஒரு வளர்ச்சி அடைந்த செல்வசெழிப்பான கோட்டையை விஷ்வகர்மா, கிருஷ்ண்ருக்காக உருவாக்கி கொடுத்தார். கிருஷ்ணர் அந்த கிராமத்திற்கு துவாரகை என பெயரிட்டு யாதவ குல மக்களை மதுராவில் இருந்து துவாரகைக்கு குடியேற்றுகிறார். யாதவ குலமக்கள் அனைவரும் செல்வச்செழிப்புடனும், சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

Share this story