சுந்தரேஸ்வரரும் பொற்றாமரைக் குளமும்.!

By 
சுந்தரேஸ்வரரும் பொற்றாமரைக் குளமும்.!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில் பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய வைபவங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

குள புராணம் :

இக்கோவிலின் தல மரம்: கடம்பம், புனித நீர்: பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை ஆகும்.பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப் பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.

கோயிலுக்குள் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில், ஒரு காலத்தில் தங்கத்தாமரைகள் பூத்ததாகவும் இதைக்கொண்டு இந்திரன் சுந்தரேஸ்வரரை பூஜித்ததாகவும் சொல்வர். 

பொற்றாமரைக் குளத்தின் அகலம்165 அடி. நீளம் 240 அடி. பரப்பளவு ஒரு ஏக்கர். மீனாட்சி அம்மன் கோயில் கட்டுவதற்கு முன்பே, இந்தக் குளம் அமைந்துவிட்டது. 

தங்கக் கோபுரங்கள் :

சுந்தரேஸ்வரருக்கு கருவறை கட்டிய பாண்டியனின் உருவம் இந்த குளத்தின் வடகரையில் உள்ள தூணில் பொறிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்தப் படித்துறை 'பாண்டியன் படித்துறை' எனப்படுகிறது. இந்த குளத்தில் தவளையும் மீனும் இருப்பது இல்லை. 

குளத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்து சுவாமி மற்றும் அம்மன் சந்நதிகளின் தங்க கோபுரங்களை வழிபடலாம். மந்த்ரிணீ சக்தி பீட நாயகியாம், மங்கலங்கள் அருளும் மீனாட்சியை தரிசித்து வாழ்வில் வளங்கள் பெறுவோம்.

Share this story