தாணுமாலய சாமி கோவில் : மார்கழி திருவிழாவுக்கு, பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி

By 
Thanumalaya Sami Temple Bandal Kal Nadu for the Markazhi Festival

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. 

இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி, மாசி, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். 

இதில், மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா, பெரும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் டிசம்பர் 11-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி, 19-ந் தேதி தேரோட்டமும் அன்று நள்ளிரவு சப்தாவர்ண நிகழ்ச்சியும், 20-ந் தேதி மார்கழி திருவாதிரையையொட்டி ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, மெல்லிசை கச்சேரி, பட்டிமன்றம் பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 

இந்த திருவிழாவிற்கான கால்நாட்டு விழா தாணுமாலயசாமி சன்னதி அருகே உள்ள முருகன் சன்னதி எதிரே கால் நாட்டு வைபவம் நடந்தது. 

அதனைத் தொடர்ந்து, மேளதாளத்துடன் பக்தர்கள் முன்னிலையில், கோவில் முன்பு பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

Share this story