திருச்செந்தூர் சாமி தரிசனம் : கூடுதலாக 3 மணி நேரம் அனுமத

 Thiruchendur Sami Darshan An additional 3 hours allowed

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நேற்றுமுதல் கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

அதேசமயம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 

மேலும், திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டவுடன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். கூடுதலாக 3 மணி நேரம் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல் தமிழக அரசின் அறிவிப்பின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கான தடை நீடிப்பதாக, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story